Skip to main content

Obstructive Sleep Apnea (OSA)

Obstructive Sleep Apnea (OSA) - அப் ஸ்ட்ரக் டிவ் ஸ்லீப் அப்னியா என்பது ஒரு வகையான தூக்க சம்பந்தமான பிரச்னை. இது உலகில் பல பேருக்கு உள்ளது. ஆனால் அவர்கள் அந்த பிரச்னை பற்றி அறியாமலோ அல்லது பெரிது படுத்தாமலோ இருந்து விடுகின்றனர். இதனை ஆரம்ப கட்டத்திலேயே அறிந்து சிகிச்சை செய்து விடுவது எளிது. 

பிரச்சனையின் அறிகுறிகள் (Symptoms)

  • தூங்கும் பொழுது மூச்சு விட முடியாமல் திடீரென விழித்து கொள்ளுதல்.
  • வாய் வழியே மூச்சு விட முயன்று வாயை திறந்து கொண்டு தூங்குவது.
  • அதிக குறட்டை. வினோதமான ஒலிகளில் குறட்டை. 
  •  ஒரு பக்கமாக படுக்கும் போது மூச்சு விட முடியாமல் திணறுதல்.
  • காலையில் எழுந்த உடன் சோர்வாக உணருதல்
  • வேலை நேரத்தில் தூக்க உணர்வு
  • தனிமையில் அமர்ந்து இருக்கும் போது தூங்கி விடுதல்
  • வாகனம் ஓட்டும் போது தூக்க உணர்வு
  • விழித்து இருக்கும் பொழுதே குறட்டை ஒலி
இவை அனைத்துமோ அல்லது இவற்றில் பெரும்பாலான அறிகுறிகளையோ நீங்கள் உணர்ந்தால் உங்களுக்கு OSA இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.

பிரச்சனையின் உடல் மூல காரணங்கள் (Physical Causes)

  • மூச்சு பாதையில் அடைப்பு ஏற்படுதல்
  • குறுகிய மூச்சு குழாய்
  • பெரிதான உள் நாக்கு
  • மூச்சு பாதையில் கட்டிகள் அல்லது அதிக சதை வளர்ச்சி
  • தூங்கும் பொழுது மூச்சு பாதையை சுற்றி உள்ள அதிக சதை தொங்கி பிராண வாயு போக்குவரத்தை சீர் குலைத்தல்
  • பின் சென்ற முக தாடை 

பக்க விளைவுகள் (Side Effects)

  • உடலுக்கு தேவையான பிராண வாயு (Oxygen) குறைந்து வயோதிக தன்மையை உணருதல் 
  • முடி நரைத்தல் மற்றும் உதிருதல் 
  • காலை சோர்வு மற்றும் காலையிலேயே தூங்குதல்
  • வாகன ஓட்டும் பொழுது தூங்கி விபத்து நேரிட வாய்ப்புகள் 
  • அதிக சத்தமான குறட்டை மற்றும் திடுக்கிட்டு எழுதல்
  • நாளடைவில் பிராண வாயு குறைவால் மாரடைப்பு, சர்க்கரை நோய் மற்றும் சிறுநீரக கோளாறு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் 
  • உடல் பருமனடைதல் 


நோய் கண்டுபிடிக்கும் முறைகள் (Diagnosis)

நாம் இந்த பிரச்சனைகளை உணரும் போது உடனடியாக ஒரு நல்ல காது, மூக்கு, தொண்டை மருத்துவரை (ENT Doctor)  அணுகுவது  மிகவும் அவசியம். மருத்துவர் பரிசோதித்த பின்பு, இந்த பிரச்சனை இருப்பதை உறுதி செய்வதற்காக சில பரிசோதனைகளை பரிந்துரைக்கலாம்.


1. ஸ்லீப் எம்.ஆர்.ஐ. டெஸ்ட் (Sleep MRI Test) : இது ஒரு வகையான ஸ்கேன் எனப்படும் கதிர் ஒளியினால் உடல் ஊடுருவி எடுக்கப்படும் ஒரு சோதனை முறை. இதன் மூலம் மூச்சு பாதையில் உள்ள தடைகள் (கட்டி, சதை வளர்ச்சி, பெரிதான உள் நாக்கு, தாடை பின்னோக்கி நகர்ந்து இருத்தல்) கண்டறிய முடியும். நவீன ஸ்கேன் சென்டர்களில் இந்த வசதி உள்ளது. (கட்டணம் ஏறத்தாழ 8000  ரூபாய்)


2. ஓவர் நைட் போர் சேனல் ஸ்லீப் ஸ்டடி (Overnight Four Channel Sleep Study) : இந்த பரிசோதனை ஒரு இரவு முழுவதும் நோயாளியுடைய தூக்க முறையை கண்டு பிடிக்க உதவுவது. இந்த முறையில் ஒருவருடைய தூக்கம் எவ்வளவு முறை தடை படுகிறது, எவ்வளவு பிராண வாயு (Oxygen) தடை படுகிறது, எவ்வளவு நேரம் பிராண வாயு இல்லாமல் நோயாளி அவதி படுகிறார், இதய துடிப்பு  போன்றவை பதிவு செய்ய படுகிறது. இந்த முறையில் சில கருவிகள் மார்பிலும் , வயிறிலும் இரண்டு பெல்ட் போன்ற பட்டையினால் பொருத்த பட்டு, இரு சிறிய குழாய்கள் மூலம் காற்று மூக்கிற்கு கொடுக்கப் படுகிறது. இந்த கருவிகளை பொருத்திக் கொண்டு நாம் நடக்க முடியும். இரவில் விழித்து இயற்கை உபாதைகளை கழிக்க முடியும்.  இதில் ஏ ஹெச் ஐ (AHI - Apnea Hypoapnea Index) என்ற அளவு பதிய படுகிறது. இந்த குறியீடு மொத்த தூக்க தடங்கல் நிகழ்வுகளை , மொத்த தூங்கும் மணிகளால் வகுத்து பெறப் படுகிறது. இந்த குறியீடு 30  அளவை தாண்டினால் நீங்கள் உறுதியாக சிகிச்சை மேற்கொள்ள  வேண்டும். 30 அளவுக்கு கீழ் உள்ளவர்கள், பிரச்சனையை பெரிதாக விடாமல் முன் கூட்டிய வழி முறைகளை பின் பற்ற வேண்டும். இந்த வசதி பெரிய காது மூக்கு தொண்டை மருத்துவமனைகளிலும் மற்ற குறித்த பரிசோதனை கூடங்களிலும் கிடைக்கின்றன. (கட்டணம் ஏறத்தாழ 7000 ரூபாய்)


சிகிச்சை முறைகள்  (Treatments)


இந்த பிரச்சனைக்கு பல சிகிச்சை முறைகள் உள்ளன. நோயின் அளவு, நோயாளியின் வயது மற்றும் மற்ற உடல் உபாதைகளை பொறுத்து மருத்துவர் தக்க சிகிச்சை முறையை பரிந்துரைப்பார்.


ஏ ஹெச் ஐ (AHI - Apnea Hypoapnea Index) குறியீடு 30 க்கும் அதிகமாக இருக்கையில் பின் வரும் மருத்துவ முறைகள் பின் பற்ற படுகின்றன.


சிபாப் முகமூடி (CPAP (Coninuous Positive Airway Pressure) Mask): இந்த முகமூடி ஒரு வகையான பிராண வாயு செலுத்தும் இயந்திரம் ஆகும். இது ஒரு குறிப்பிட்ட அழுத்தத்தில் வாயுவை மூக்கின் வழியாகவோ அல்லது மூக்கு மற்றும் வாய் வழியாகவோ செலுத்தி தூக்கத்தை தடை இல்லாமல் செய்யும். இந்த இயந்திரம் தற்பொழுது பல சிறிய அளவுகளில் பல மாற்றங்களுடன் வருகின்றன. இது  தொடர்ந்து இரவில் தூங்கும் பொழுது பயன் படுத்த வேண்டும்.  பொதுவாக இம்முறை அறுவை சிகிச்சை செய்ய முடியாதவர்களுக்கும், வயதானவர்களுக்கும் பரிந்துரைக்கப் படுகிறது.


வயது குறைந்தவர்களுக்கும், சிபாப் முகமூடி அணிய விரும்பாதவர்களுக்கும், அறுவை சிகிச்சை பரிந்துரைக்க படுகிறது. அறுவை சிகிச்சை லேசர் முறையிலும், சாதாரண முறையிலும் செய்ய முடியும். இது குறிப்பாக எந்த இடத்தில் தடை நீக்கப் படுகிறது மற்றும் நோயாளியின் வாயின் அளவை பொறுத்து முடிவு செய்ய படுகிறது. லேசர் முறையில் ஒரு நாளில் அறுவை சிகிச்சை செய்யப் பட்டு மறு நாள் வீட்டிற்கு செல்லும் அளவிற்கு எளிதானது. எந்த வகை அறுவை சிகிச்சை ஆனாலும் 2 முதல் 3 வார ஓய்வு அவசியம். இந்த சமயத்தில், அறுவை சிகிச்சை செய்த பகுதியில் எந்த கிருமி பரவலும் இல்லாமலும் காக்க வேண்டும். (கட்டணம் ஏறத்தாழ 70000 முதல் 80000 ரூபாய் வரை. காப்பீடு உடையவர்கள் எல்லா செலவுகளையும் காப்பீட்டு நிறுவனத்தில் விண்ணபித்து பெறலாம் அல்லது பணம் இல்லாமலேயே குறித்த மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம்)


மிக சிறந்த மருத்துவர்கள் நம் நாட்டிலேயே உள்ளனர். சென்னையில் உங்களுக்கு நல்ல மருத்துவர் உதவி தேவை பட்டால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும். என்னுடைய மருத்துவரை அணுக உதவி செய்ய முடியும்.

சமூக பிரச்சனைகள் (Social Problems)

1. பிறருடன் தூங்கும் அறையை பகிர்ந்து தூங்க வேண்டியவர்கள் மிகவும் தர்ம சங்கடத்திற்கு உள்ளாக நேரிடும். மிக குறிப்பாக வேலை விஷயமாக நாம் மற்றவருடன் தங்க நேரிடும் பொழுது, உடன் தங்குபவர்களின் கேலிக்கு ஆளாக நேரிடும்.

2 வாழ்க்கை துணைவருடன் இது தொடர்பாக கருத்து வேறுபாடு ஏற்படும் வாய்ப்பு உண்டு அல்லது தூக்கம் கெடும் வாய்ப்பு உண்டு.

3  விமானத்திலோ, புகை வண்டியிலோ, பேருந்திலோ நெடும் பயணம் புரியும் பொழுது அடுத்தவர் தூக்கம் கெட்டு தர்ம சங்கடத்திற்கு ஆளாக நேரிடலாம். நான் சப்தமாக உறங்குவதை கண்டு அடுத்த பயணி, விமான பணிப் பெண்ணிடம் புகார் செய்ய, அவர் என் மனைவியிடம் என்னை எழுப்ப வேண்டிய பொழுது, என் மனைவி விமான பணியாளரிடம் நீண்ட வாக்குவாதத்தில் சண்டை போட்ட நிகழ்வுகளும் உண்டு.

4 ஓட்டுனர் போன்ற பணியில் இருப்போர், இந்த பிரச்னையில் இருக்கும் போது, அவரை நம்பி பயணிக்கும் பயணிகளின் உயிருக்கும் அவர் பொறுப்பாவார்.



முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் (Precautions)



  • நேரம் தவறாமல் தூங்குதல்
  • காலத்தில் உணவு உட்கொள்ளுதல்
  • அளவாக உண்ணுதல்
  • போதிய உடல் பயிற்சி செய்தல்
  • மது மற்றும் புகை பழக்கங்களை கை விடுதல்
  • அதிகமாக குளிர் பானங்களை தவிர்த்தல்
  • மூச்சு பயிற்சி மேற்கொள்ளுதல்
  • சுத்தமான படுக்கையில் உறங்குதல் 

இவை அனைத்தையும் கடை பிடிக்காததே முதற் காரணங்களாக இருக்க கூடும். எனவே அனைவரும் இந்த வழி முறைகளை கடை பிடித்து ஆரோக்யமாக வாழ்வோம்.


பின் குறிப்பு: 


இந்த பதிவு ஒரு நோயாளியின் கண்ணோட்டத்தில் எழுதப் பட்டது. சில கருத்துகள் தவறாக புரியப் பட்டவையாக இருக்கலாம். இது ஒரு மருத்துவரால் எழுதப் பட்டது அல்ல. எனவே இதனை தக்க மருத்துவரிடம் உறுதி செய்து கொள்ளுங்கள். நிறைய ஆங்கில பதிவுகளும், வலை மனைகளும்  இந்த பிரச்னை பற்றி எழுதி இருப்பதாலும் தமிழகத்தில் இந்த பிரச்சனை ஒரு பெரிய நோயாக கருத படாததாலும் இதனை தமிழில் பதிய முயன்று இருக்கின்றேன்.

















Comments

Nakshatra said…
Hey Sankar...thanks for the awareness..Hope this would help ppl who ignore these symptoms as minor problems..tc...Kalai

Popular posts from this blog

My Prayer

"Vaan Muhil Valaathu Peiga Mali Valam Surakka Mannan Kon Murai Arasu Seiga Kuraivilaathu Uyirgal Vaazgha, Naan Marai Arangal Onga Natravam Velvi Malga Menmai Kol Saiva Needhi Vilanguga Ulagam Ellam" "வான் முகில் வளாது பெய்க மலி வளம் சுரக்க மன்னன் கோன் முறை அரசு செய்க குறைவிலாது உயிர்கள் வாழ்க, நான் மறை அறங்கள் ஓங்க நற்றவம் வேள்வி மல்க மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம் " Translation "Good enough rain for the world Quality soil Resource for cultivation King who rules as per justice and good guidelines Problem free life for all lives Large implementations of 4 vedas in society More existence of Good Prayers and Yaagas Upliftment of saivait rules (Guidelines of People who worship Lord Shiva) in all over the world" This is the prayer I used to recite in my 30 seconds of prayer time every day, eventhough I am not very serious about he second paragraph. I used to hear it in most of the prayers in temples and prayer mee...

ஆடி மாத அடாவடிகள்

மன்மத வருடத்தில் நாளை கடைசி ஆடி வெள்ளி.  ஒரு பக்கம் எல்லா கடைகளும் ஆடி தள்ளுபடின்னு விலைய ஏத்தி அத பெரிசா 50%, 70% கழிவுன்னு சொல்லி விளம்பரம் கொடுக்க, இன்னொரு பக்கம் இந்த பக்த கேடிகள், சாரி பக்த கொடிகள் தெருவுக்கு தெரு பண்ணும் அட்டகாசங்கள் தாங்க முடியல. ஆடி மாசம் வெள்ளி கிழமைல வண்டி எடுக்கறதுக்கு பயமா இருக்கு. நல்லா  போட்ட ரோட்ட குழி தோண்டி, பந்தல் போட்டு, நடு வீதியில ட்ராபிக்க மறிச்சு, கூழ் ஊத்தி, புஷ்பவனம் குப்பு சாமிய கூட்டி வந்து கச்சேரி நடத்தி, பெரிய பெரிய சாமி உருவ சீரியல் செட் போட்டு, ஒரு கிலோ மீட்டருக்கு ட்யுப் லைட் போட்டு ஒரு வழி பண்ணி, எல்லா அம்மன் கோயில் இருக்கும் ஏரியாவையும் ஒன் வேயா மாத்தி, லௌட் ஸ்பீக்கற அலற விட்டு  மக்களை நாத்திகர்களாக மாற்றி கொண்டு இருக்குறாங்க. இவங்க பண்ற செலவுல இருக்குற கோயில விட பெரிய கோயிலே கட்டலாம். கோயிலே பத்துக்கு பத்து அளவுதான். அதுக்கு பந்தல் அது மாதிரி பத்து மடங்கு.  இது இப்படியே போனா விவேக் சொல்ற மாதிரி பத்து பெரியார் உருவானாலும் ஆச்சரிய பட முடியாது. இவங்க மக்கள் கிட்ட வசூல் பண்ற காச வச்...

மதில் மேல் மனசு

நிறைய எழுத வேண்டும் என்ற ஆசை இருந்தால் மட்டும் போதாது... அதற்கு ஒரு தனி ஆர்வமும் நேரம் ஒதுக்கி முயற்சிப்பதும் அவசியம்... பகிர்ந்து கொள்ள நினைத்து பதிய முடியாமல் போன விஷயங்கள் நிறைய... 1 சென்னை புத்தக கண்காட்சியும் அதில் வாங்கிய புத்தகங்களும்... அநேகமாக 2 மாதங்களுக்கு முன்பு நடந்த புத்தக கண்காட்சியில் முதல் முறையாக செல்ல நேர்ந்தது... ஒரே இடத்தில அனைத்து பதிப்பகங்களும் திரண்டு இருந்தது வாசகர்களுக்கு ஏக கொண்டாட்டம். அனைத்து ஸ்டால்களையும் ஒரு மாலையில் பார்வையிடுவது முடியாத காரியம். ஒரு முழு நாள் தேவை. பாதி கூட்டம் வெளியில் உள்ள சாப்பாட்டு ஸ்டால்களை மட்டுமே டார்கெட் செய்து வந்திருந்தது. ஒரு கூட்டம் பொழுது போக்கிற்காக வெளி மைதானத்தில் நடந்த மியூசிக் ஆர்கெஸ்ட்ரா கேட்டு கொண்டு கடலை சாப்பிட்டு கொண்டு இருந்தது... கண் தெரியாத இளைஞர் ஒருவர் கஷ்டமான "என்னமோ ஏதோ" என்ற "கோ" பட பாடலை ரசித்து பாடினார். நான் புத்தகங்களை வாங்குவதில் மிக சிரமப் பட்டு விட்டேன். எதை எடுக்க எதை விட என்று புரிய வில்லை. கடைசியாக "ஸ்ரீரங்கத்து தேவதைகள்" - சுஜாதா, "வாஷிங்டனில் த...