நான் ஏன் ட்ரெயின் டிக்கெட் எடுக்கும் போது தப்பு பண்ணுகிறேன் என்று தெரிய வில்லை. இரண்டாவது முறையாக மாலை 4 30 மணிக்கு பதிலாக காலை ட்ரெயினில் புக் பண்ணி விட்டு கடைசி நிமிடத்தில் டிக்கெட்டை பார்க்கிறேன். காமெடி என்னன்னா டிக்கெட் புக் பண்ணுவது 2 மாதத்திற்கு முன்பு. ரொம்ப முன் ஜாக்கிரதை முத்தன்னவாக இருந்தாலும் பல்பு வாங்குகிறோம் அப்பப்போ... முதலில் ட்ரெயின் டிக்கெட்டில் ரயில்வே டைம் பிரிண்ட் பண்ணுவதை ஸ்டாப் பண்ண சொல்ல வேண்டும். AM மற்றும் PM என்று தெளிவாக பிரிண்ட் பண்ண சொல்லி முகுல் ராய்க்கு சொல்ல வேண்டும்... அவர்தானே ரயில்வே மினிஸ்டர்? இல்ல அவரையும் தூகிட்டான்களா? இருபது நாள் முன்னால் கர்ணன் படம் புக் பண்ணி சத்யம் தியேட்டரில் பார்க்க நேரிட்டது... என்ன ஒரு படம்... நம்ம செவாலியே பர்பாமான்ஸ் ரொம்ப பிரமாதம்... உடம்பு முழுவதும் நடிக்கிறது.. சில சீன்ல கொடுத்த பேமண்டுக்கு மேல் பர்பாமான்ஸ் கொடுத்து இருக்கார். இது போல் சில பழைய படங்கள் ரிலீஸ் செஞ்சா நாங்க வந்து பாக்க ரெடி... குறிப்பா கமல் படங்கள் திரும்ப பார்க்க ஆசை. தேவர் மகன், விருமாண்டி, நாயகன், சிங்கார வேலன், மைகேல் மதன காமராஜன்...
Disclaimer: Posts in this blog are absolutely suitable for matured minds irrespective of the age. Some of the opinions expressed here may shatter your fundamental thoughts and what you think as morale. Reader discretion is highly recommended.