பே பே: இந்த உலக மகத்துவம் வாய்ந்த விளையாட்டை யார் கண்டு பிடிச்சதுன்னு தெரியல... ஆனா ரொம்ப பரபரப்பான விளையாட்டு. ஆட்டக்காரர்களை இரண்டு அணிகளாக பிரித்து பந்தை வைத்து எதிரணி ஆட்களை அடிக்க வேண்டும். அடி சில சமயம் பலமாக கூட விழும்.. எந்த அணி ஆளிடம் பந்து இருக்கிறதோ அவரை விட்டு அனைவரும் விலகி ஓடுவர். கல்லா மண்ணா? இரண்டு அணிகள் தங்கள் ராஜ்ஜியத்தை தேர்ந்தெடுக்க வேண்டும். ஒரு அணியின் பகுதி கல்லும் கல் சார்ந்த இடமும்... தார் ரோடு கல் சார்ந்த இடமாக கருதப்படும். அடுத்த அணி மண் மற்றும் மண் சார்ந்த இடத்தை எடுத்துக் கொள்வர். ஒரு அணி அடுத்தவர் இடத்தில் போய் நின்று "உன் மண்ணுல நிக்கிறேனே வெட்கம் இல்லையா?", " உன் கல்லுல நிக்கிறனே வெட்கம் இல்லையா?" என சீண்டுவார்கள். அப்போது எதிர் அணி வீரர் வந்து தன் எல்லைக்குள் நிற்பவரை தொட்டு விட்டால் ஒரு பாயிண்ட். இப்படி மாறி மாறி ஒருவரை ஒருவர் சீண்டி விளையாட்டு தொடரும். தேங்கா தென்னை மரம் இது மிகவும் பொடி பசங்களுக்கான விளையாட்டு. அவர்களின் உன்னித்து கேட்கும் சக்தியை சோதிக்கும் விளையாட்டு. ஒரு 5 சிறுவர்கள் இருந்தால் அவர்களுக...
Disclaimer: Posts in this blog are absolutely suitable for matured minds irrespective of the age. Some of the opinions expressed here may shatter your fundamental thoughts and what you think as morale. Reader discretion is highly recommended.