Skip to main content

Posts

Showing posts from February, 2014

தேர்தல் 2014

ஒரு இந்திய வாக்காளனாக எனக்கும் நிறைய எதிர் பார்ப்புகள் இந்த தேர்தலை சுற்றி உள்ளன... 2009லும் இருந்தன..  அப்பொழுது எழுதிய பதிவு இங்கே அதே எதிர்பார்ப்புகள் இன்றும் இருக்கின்றன... சேது சமுத்திர திட்டத்தை தவிர... ஏன் எனில் சேது சமுத்திர திட்டத்தை செயல் படுத்துவதில் உள்ள சிரமங்களை பற்றி தெளிவான கருத்து என்னிடம் இல்லை. கண்டிப்பாக அது ராமர் மீது உள்ள பக்தியால் இல்லை. இந்த முறை அமையக் கூடிய ஆட்சி இவை எல்லாம் செய்யுமா என தெரிய வில்லை.. யார் ஆட்சிக்கு வருவார்கள் என்றும் தெரிய வில்லை... இந்த முறை நடக்கும் தேர்தல் கட்சிகளுக்கு மத்தியில் என்பதை விட தனி மனிதர்களுக்கு இடையில்தான் நடக்கிறது... என் உள் மனதில் மோடி,ராகுல்,ஜெயலலிதா அல்லாத ஒரு நபர் பிரதமராக வருவாரோ என்று தோன்றுகிறது... எப்படி 2004ல் மன்மோகன் வந்தாரோ அதைப் போல ஒரு எதிர்பாராத நபர் வந்தால் என்ன ஆகும் என்ற சந்தேகங்கள் வருகின்றன.. சமீப காலமாக எனக்கு ஒரு யோசனை.  IPL போல தேர்ந்தெடுக்கப் படும் எல்லா MP களில் இருந்து கட்சி பாகுபாடு இல்லாமல் அமைச்சரவை தேர்ந்தெடுக்கப் பட்டால் எப்படி இருக்கும் என்று... ஓகே யார் வர வேண்ட...