நிறைய எழுத வேண்டும் என்ற ஆசை இருந்தால் மட்டும் போதாது... அதற்கு ஒரு தனி ஆர்வமும் நேரம் ஒதுக்கி முயற்சிப்பதும் அவசியம்...
பகிர்ந்து கொள்ள நினைத்து பதிய முடியாமல் போன விஷயங்கள் நிறைய...
1 சென்னை புத்தக கண்காட்சியும் அதில் வாங்கிய புத்தகங்களும்...
அநேகமாக 2 மாதங்களுக்கு முன்பு நடந்த புத்தக கண்காட்சியில் முதல் முறையாக செல்ல நேர்ந்தது... ஒரே இடத்தில அனைத்து பதிப்பகங்களும் திரண்டு இருந்தது வாசகர்களுக்கு ஏக கொண்டாட்டம். அனைத்து ஸ்டால்களையும் ஒரு மாலையில் பார்வையிடுவது முடியாத காரியம். ஒரு முழு நாள் தேவை. பாதி கூட்டம் வெளியில் உள்ள சாப்பாட்டு ஸ்டால்களை மட்டுமே டார்கெட் செய்து வந்திருந்தது. ஒரு கூட்டம் பொழுது போக்கிற்காக வெளி மைதானத்தில் நடந்த மியூசிக் ஆர்கெஸ்ட்ரா கேட்டு கொண்டு கடலை சாப்பிட்டு கொண்டு இருந்தது... கண் தெரியாத இளைஞர் ஒருவர் கஷ்டமான "என்னமோ ஏதோ" என்ற "கோ" பட பாடலை ரசித்து பாடினார். நான் புத்தகங்களை வாங்குவதில் மிக சிரமப் பட்டு விட்டேன். எதை எடுக்க எதை விட என்று புரிய வில்லை. கடைசியாக "ஸ்ரீரங்கத்து தேவதைகள்" - சுஜாதா, "வாஷிங்டனில் திருமணம்" - சாவி, "மதில் மேல் மனசு" - பட்டுக்கோட்டை பிரபாகர் மற்றும் சில ஜே.கிருஷ்ணமூர்த்தி புத்தகங்களும் வாங்கி கொண்டு வந்து விட்டேன்.
2 மாதங்களில் ஸ்ரீரங்கத்து தேவதைகள் மட்டும் படிக்க முடிந்தது. 3 நாட்களுக்கு முன் தமிழ் வருட பிறப்பிற்காக திருச்சி வந்த பொழுது "மதில் மேல் மனசு" புத்தகத்தை படித்தே தீர வேண்டும் என்றும் கங்கணம் கட்டி கொண்டு ராக் போர்டில் ஏறினேன். இரவு பத்து முப்பதுக்கு எக்மோரில் ட்ரெயின் எடுத்த பொழுது வாசிக்க ஆரம்பித்தது விழுப்புரம் வரும் வரை நான் ஸ்டாப்பாக படித்து முடித்து விட்டுதான் கீழே வைத்தேன்.
அநேகமாக இது நான் படிக்கும் முதல் பட்டுகோட்டை பிரபாகர் புத்தகமாக இருக்க வேண்டும். சிறு வயதில் ஏதோ படித்தது ஞாபகம். முதலில் நான் தேடி சென்ற புத்தகம் "பிருந்தாவனமும் நொந்த குமாரனும்". ஆனால் கிடைத்தது "மதில் மேல் மனசு" மட்டுமே. பதிவர் "ஜாக்கி சேகர்" அவர்களின் தளத்தின் தலைப்பை வைத்தும் அவரின் புத்தக விமர்சனமும் படித்து நான் தேடிய புத்தகம்தான் "பி நொ கு". கூடிய சீக்கிரம் அந்த புத்தகத்தை பெற முயற்சிப்போம்.
மதில் மேல் மனசு
இந்த புத்தக தலைப்பும் அதற்கு ராஜேஷ் குமார் அவர்களின் முன்னுரையும் மிக அருமை. உண்மையில் தலைப்பே ஒரு கவிதைதான்.
இந்த கதை ஒரு திரைப்படமாகப் படுவதற்கு உண்டான அனைத்து அம்சங்களும் உள்ளடக்கியது. ஒரு சாப்ட்வேர் இளைஞனுக்கும் ஒரு டிவி காம்பியரருக்கும் உள்ள காதல் கதை. அவர்கள் காதல் எப்படி சொல்லாமலே அவர்களை சேர்த்து வைக்கிறது என்பதை மிக சுவாரசியமாக சொல்லும் கதை.. ஒரு வரி கதையை எப்படி ஒரு புத்தகமாக கொடுப்பது என்பதில் பிரபாகர் வல்லவராக இருக்கிறார். ஸ்க்ரீன் ப்ளே பண்ண வேண்டும் என்றாலும் அதிக வேலை செய்ய தேவை இல்லை. ஒவ்வொரு சாப்டரையும் சீன் பி சீன் எடுக்கலாம். ஹீரோ சிவா மற்றும் ஹீரோயின் உதயா கேரேக்டேரில் நடிக்க பிரசன்னாவையும் சினேகாவையும் போடலாம். நாலு பாட்டு வித்யா சாகரை விட்டு மெலடி போடா சொன்னால் படம் சூப்பர் ஹிட்...
நிஜத்தில் நம் மனது பல தருணங்களில் மதில் மேல் பூனையாக குழம்பித்தான் கிடக்கிறது...
Comments