Skip to main content

Posts

Showing posts from September, 2012

இனி ஒரு விதி செய்வோம் - Part 1

விதி 1: கடந்த ஒரு வருடத்தில் நெற்குன்றதிற்கு செல்ல நேரும் தருணத்தில், இந்த குறிப்பிட்ட தெருவை கவனித்து வருகிறேன். முதலில் இந்த தெரு கோயம்பேடு மார்கெட்டிற்கு போக குறுக்கு வழியாக பயன்படுத்தப் பட்டது.  பின்பு பாதாள சாக்கடை போடுவதற்காக தோண்ட பட்டது. தெரு முழுக்க மண். அங்கு இருந்த தார் ரோடு எங்கு போனதென்று லென்ஸ் வைத்து தேட வேண்டும். அங்கு வீடுகளுக்குள் வாகனம் நிறுத்தினாலும் தினமும் உங்கள் வண்டி செம்மண் கலரில் மாறுவது உறுதி. வீட்டுக்குள் வரும் மண்ணை ஒரு மாதத்திற்கு கூட்டி சேர்த்தால் மாதம் ஒரு பிள்ளையார் கோயில் கட்டலாம். அந்த தெருவில் காரிலோ பைகிலோ கர்ப்பிணி பெண்கள் போனால் டெலிவரி துரிதமாவது உறுதி. லோக்கல் ஆட்கள் இதை பற்றி நம்பிக்கை இழந்து விட்டதாகவே தெரிகிறது. சம்பந்த பட்ட அதிகாரிகள் இங்கு ரோடு போட நடவடிக்கை எடுத்தால் மக்கள் கொஞ்சம் நிம்மதியாக இருக்கலாம். அதே போல லாரிகள் இந்த தெருவுக்குள் நுழையாமல் இருக்க நடவடிக்கை எடுத்தால் கூடுதல் நிம்மதி. ஏதாவது ஒரு MLA அல்லது மினிஸ்டர் இங்கு இருந்தால் இந்த ரோடு இப்படி இருக்குமா? யாராலும் ஒரு மாதமோ 2 மாதமோ இது போன்ற தெருவில் வசிக்கலாம்.. அதுவ...