Skip to main content

Posts

Showing posts from November, 2013

பிள்ளையாய் இருப்பதிலே இல்லை ஒரு துன்பமடா !

எத்தனை பேருக்க்கு நினைவிருக்கும் தெரியவில்லை. சில குழந்தை பருவ விளையாட்டுகள் இப்போது காணாமல் போய் விட்டன. நமக்கே சிலன மறந்து போய் விட்டன. இந்த பதிவு அந்த தொலைந்து போன, தொலைந்து கொண்டு இருக்கின்ற விளையாட்டுகளை பதிவதற்காக. 1. செதுக்கு:  இந்த விளையாட்டில் ஒரு வட்டம் தரையில் வரைந்து அதற்குள் அவரவர் கொண்டு வந்த புளியன் கொட்டைகளை போட வேண்டும். ஆளுக்கு 10 அல்லது 20 என எல்லோரும் சமமாக போட்டு, அதனை தட்டையான கல்லை வைத்து செதுக்கி வட்டத்துக்கு வெளியே எடுக்க வேண்டும். அந்த கொட்டைகள்  செதுக்கி எடுப்பவருக்கு சொந்தம். ஒரு செதுக்கில் ஒரு கொட்டை கூட எடுக்க வில்லையெனில் ஆட்டம் அடுத்தவருக்கு போகும். இப்படி ஒருவர் கொண்டு வந்த புளியன் கொட்டைகளை இழந்து வீடு திரும்புவதும் உண்டு, ஜாக்பாட் அடித்து அடுத்தவர் சேமிப்பை வழித்து எடுத்து கொண்டு போவதும் உண்டு. இதுவே பின்னாளில் சிகரெட் அட்டைகளை கொண்டு விளையாடினர். சிசர்ஸ் அட்டைக்கு 10 பாயிண்ட், கோல்ட் ப்லக் 20 பாயிண்ட். சார்மினார் 100 பாயிண்ட். எப்படி தொண்ணூறுகளுக்கு பிறகு குழந்தைகள் WWF கார்டுகளை சேர்க்க ஆரம்பித்தார்களோ, அதற்கு முன் சி...