Skip to main content

Posts

Showing posts from November, 2011

இதுவும் கடந்து போகும் - பாகம் 2

இது மிகவும் கஷ்ட காலம், இந்திய மக்களுக்கு... அதிலும் குறிப்பாக தமிழக மக்களுக்கு... கடந்த வார விலை உயர்வு அறிவிப்பு பல தர மக்களுக்கும் அதிர்ச்சி தரக்கூடிய விஷயமாகவே உள்ளது... பால், மின்சாரம் மற்றும் போக்குவரத்து விலைகள் உயர்த்தப் பட்டுள்ளன.. இவை அனைத்தும் ஒட்டு மொத்தத்தில் மற்ற அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளை விண்ணுயர விலைகளுக்கு தள்ளப் போகிறது... ஆங்கிலத்தில் இதனை Ripple Effect என்று குறிப்பிடுவார்கள். ஒரு குளத்தில் ஒரு கல்லை எறிந்தால் எப்படி அது ஒரு வளையத்தை ஏற்படுத்தி பின்பு அடுத்தடுத்த பெரிய வட்டங்களை ஏற்படுத்துவதை போல, இந்த விலை உயர்வு மற்ற தேவைகளின் விலை உயர்வுக்கு வழி வகுக்கும். எனவே விலைவாசி இதையும் கடந்து போகும்... இந்த விஷயம் அரசியல், பொருளாதாரம் மற்றும் மக்களின் அன்றாட வாழ்க்கை சம்பந்தமான விஷயம்.... முதலில் அரசியல் : இந்த விலை உயர்வு ஒரு கசப்பு மருந்து என்று ஒரு நாள் இதழ் குறிப்பிட்டு எழுதி உள்ளது. விலை உயர்வு எல்லோருக்கும் கசப்பு மருந்துதான்... ஆனால் தொண்டையை பிடிக்கும் அளவுக்கு கசப்பு நல்லதல்ல...  எல்லா பொருட்களுமே விலை உயர்வது தவிர்க்க முடியாதது, ஆனால் எவ்வளவு ...