மன்மத வருடத்தில் நாளை கடைசி ஆடி வெள்ளி. ஒரு பக்கம் எல்லா கடைகளும் ஆடி தள்ளுபடின்னு விலைய ஏத்தி அத பெரிசா 50%, 70% கழிவுன்னு சொல்லி விளம்பரம் கொடுக்க, இன்னொரு பக்கம் இந்த பக்த கேடிகள், சாரி பக்த கொடிகள் தெருவுக்கு தெரு பண்ணும் அட்டகாசங்கள் தாங்க முடியல. ஆடி மாசம் வெள்ளி கிழமைல வண்டி எடுக்கறதுக்கு பயமா இருக்கு.
நல்லா போட்ட ரோட்ட குழி தோண்டி, பந்தல் போட்டு, நடு வீதியில ட்ராபிக்க மறிச்சு, கூழ் ஊத்தி, புஷ்பவனம் குப்பு சாமிய கூட்டி வந்து கச்சேரி நடத்தி, பெரிய பெரிய சாமி உருவ சீரியல் செட் போட்டு, ஒரு கிலோ மீட்டருக்கு ட்யுப் லைட் போட்டு ஒரு வழி பண்ணி, எல்லா அம்மன் கோயில் இருக்கும் ஏரியாவையும் ஒன் வேயா மாத்தி, லௌட் ஸ்பீக்கற அலற விட்டு மக்களை நாத்திகர்களாக மாற்றி கொண்டு இருக்குறாங்க.
இவங்க பண்ற செலவுல இருக்குற கோயில விட பெரிய கோயிலே கட்டலாம். கோயிலே பத்துக்கு பத்து அளவுதான். அதுக்கு பந்தல் அது மாதிரி பத்து மடங்கு. இது இப்படியே போனா விவேக் சொல்ற மாதிரி பத்து பெரியார் உருவானாலும் ஆச்சரிய பட முடியாது.
இவங்க மக்கள் கிட்ட வசூல் பண்ற காச வச்சு ஒன்னும் உருப்படியா பண்றது இல்ல. அனாவசிய ஆடம்பர மக்களை எரிச்சல் பட வைக்கிற எல்லா வேலையும் செய்றாங்க.
நெறயா திடீர் கோயில்கள்ல வசூல் பண்ற காசுக்கு ஒரு கணக்கும் கெடயாது. பல இடங்களில் தல வரி விழா குழுவினர் முடிவு பண்றதுதான். எவ்வளவு யாருகிட்ட வாங்குறாங்கன்னு யாருக்கும் தெரியாது.
விழா குழுவினர்களே,
உங்களுக்கு ஒரு கோரிக்கை. இல்லை. சில கோரிக்கைகள்.
1. விழா நடத்துங்க. ஆனா பொது மக்களை தொந்தரவு பண்ணாதீங்க.
2. கரண்ட்டை வீணாக்காதீங்க.
3. ட்ராபிக்க மறிக்காதீங்க.
4. சத்தமா லௌட் ஸ்பீக்கர் போட்டு படிக்கற பசங்களுக்கு இடைஞ்சல் பண்ணாதீங்க.
5. ரோட்டுல குழி தோண்டாதீங்க.
6. பெரிசா பேனர் அடிச்சு ஊதாரித்தனம் பண்ணாதீங்க.
7. முடிஞ்சா கோயிலையும் அத சுத்தியுள்ள ஏரியாவையும் சுத்தமா வச்சுக்க காச செலவு பண்ணுங்க.
இப்படிக்கு,
விழாக்களால் காண்டான ஆத்திகன்.
பி.கு. இல்லாட்டி எல்லா அம்மனும் காண்டா ஆகி உங்க கண்ண குத்தும்.

Comments