Skip to main content

Posts

Showing posts from 2018

தேர்தல் 2019

எல்லோரும் தங்கள் அரசியல் கருத்துக்களை பதிவு செய்து வரும் இந்த நேரத்தில், என்னுடைய கருத்தையும் பதிவு செய்வது என்று தீர்மானித்து வெகு நாட்களுக்குப்  பிறகு இந்த பதிவை எழுதுகிறேன். இதில் மாற்று கருத்து உள்ளவர்கள், தங்கள் கருத்தை மிக நாகரிகமாக முன் வைத்தால், நல்ல விவாதங்களுக்கு நான் தயார்.  சொல்ல வந்ததை முதலில் சொல்லி விடுகிறேன். பின்பு காரணங்களாக நான் கருதுவதை விளக்குகிறேன்.  1. தமிழ்நாடு சட்ட மன்ற தேர்தல், 2019 பாராளுமன்ற தேர்தலோடு சேர்ந்து வர வாய்ப்பு இருப்பதாக யூகிக்கிறேன். 2. அப்படி வந்தால், திமுக ஆட்சியை பிடிக்கும் என்று நினைக்கிறேன் அல்லது விரும்புகிறேன். நான் தி மு க உறுப்பினர் அல்ல. 3. மத்தியில் பாஜக மறுபடியும் ஆட்சியை பிடிக்கும் என்று நினைக்கிறேன் அல்லது விரும்புகிறேன். நான் பா ஜ க உறுப்பினரும் அல்ல. ஆனால் தமிழ் நாட்டில் பா ஜ க ஒரு தொகுதியில் கூட வெல்ல வாய்ப்பு இல்லை. நானே ஓட்டு போட மாட்டேன். 4. மத்தியில் உருவாகும் பா ஜ க ஆட்சியில் ஒரு தமிழக கட்சியும் கூட்டணியில் இருக்க வேண்டும். தி மு க அப்படி இருக்குமா என்றால், அது நடக்கும் என்று தோன்ற வி...