ஒரு வருடத்திற்கு பிறகு ஒரு பதிவு போட இப்பதான் நேரம் வந்தது. போன வருஷம் ஆடி மாதத்தில் எழுதியது. அடுத்த ஆடி போய் விட்டது.
எதை பற்றி எழுதுவது? சினிமா விமர்சனம்? பல பேர் எழுதுகிறார்கள். நம்ம என்ன புதுசா எழுத இருக்கு?
சமீபத்தில் என் ஆபீஸ் பாஸ் அரவிந்த் பொன்னிறைவன் வேலைய ரிசைன் பண்ணி விட்டு திடீர்னு ரெஸ்டாரண்ட் ஆரம்பிச்சுட்டார். கோடம்பாக்கம் சக்ரபாணி தெருவில் மஞ்சள் ரெஸ்டாரண்ட்னு போன மாசம் ஆரம்பிச்ச்சு நல்லா போய்கிட்டு இருக்கு.. http://manjalspice.in/
கிட்ட தட்ட 15 வருஷம் ஐடி வேலை.. பின்ன ஒரு நாள் பொசுக்குன்னு இப்படி பண்ணிட்டார்..
சும்மா சொல்ல கூடாது.. கிட்ட தட்ட ஒரு வருஷம் கிரௌண்ட் ஒர்க் பண்ணி, இன்டீரியர்ஸ் எல்லாம் பக்காவா ரெடி பண்ணி, நல்ல குக், வெய்ட்டர்ஸ் எல்லாம் ஐடி வேலைக்கு இன்டெர்வியூ பண்ற மாதிரி பண்ணி சூப்பரா பண்ணி இருக்கார். வாழ்த்துக்கள் அரவிந்த்!
நாங்களும் போய் ஒரு நாள் லஞ்ச் ஒரு பிடி பிடிச்சுட்டு வந்தோம்.. எனக்கு என்ன பிடிச்சதுன்னா வெஜிடேரியன் சாப்பாடும் நல்லா பண்ணி இருக்காங்க.. எப்போதும் நான் வெஜிடேரியன் ரெஸ்டாரண்ட் வெஜிடேரியன கண்டுக்க மாட்டாங்க..
மலாய் ப்ரோக்கோலி கபாப் உண்டே ஆக வேண்டிய விஷயம்.. (எப்படி சிவ கார்த்திகேயனுக்கு திண்டுக்கல் ரீட்டாவோட ஆடலும் பாடலும் நிகழ்ச்சி போட்டே ஆகணுமோ அது போல) அடுத்து பன் பரோட்டா ரொம்ப நைஸ்... வெஜ் தாலி எந்த வெஜிடேரியன் பவன்ல சாப்பிடுறத விடவும் ரொம்ப நல்லாவே இருக்கு...
மற்ற ஸ்பெஷல் எல்லாம் நீர் மோர், பானக்கம், நன்னாரி சர்பத், சுலைமானி டீ, பன்னீர் சோடா இத மாதிரி சில ஐட்டங்கள்.. டீடைலா இங்க பார்த்துக்கோங்க http://manjalspice.in/manjal-menu/
நம்ம பங்குக்கு zomoto ல ஒரு ரிவியூ போட்டு விட்டோம்.. நமக்கு performance apraisal பண்ணினதை எல்லாம் மனசுல வெச்சுக்காம ரிவியூ போட்டு இருக்கோம்னா ஒரே காரணம் போட்ட சோறு நல்லா இருந்ததினாலதான்...
என்ன ஒரு விஷயம் புரியலன்னா எப்படி இது மாதிரி ரிஸ்க் எடுத்து பண்ண முடிகிறது.. ஒரு நல்ல வேலை 500க்கும் மேல மக்களை மேனேஜ் பண்ணிட்டு திடீர்னு எப்படி இப்படி?
பல ஐடி மக்கள் பல நாள் பிளான் பண்ணி கிட்டே இருப்பாங்க... நம்ம இப்படி ஆணிய புடுங்கி கிட்டு இருக்கறதுக்கு ஒரு டீ கடை பக்கத்தில போட்டா நிம்மதியா இருக்கலாம்னு.. ஆனா நெறையா பேருக்கு துணிச்சல் வராது.. அந்த பல பேர்ல நம்மளும் ஒரு ஆள்.. பார்ப்போம், காலங்கள் மாறும்! காட்சிகள் மாறும்!
இப்போ திரும்ப எழுத ஆரபிக்கிறதே நமக்கு பிடிச்ச விஷயங்களை தொடர்ந்து பண்ணனும்னு வந்திருக்கிற ஆர்வத்தினாலதான்.. தொடர்ந்து இத மாதிரி இன்னும் நிறைய எழுத பிளான் பண்ணி இருக்கிறேன்.. பார்ப்போம்.. காலங்கள் மாறும்! காட்சிகள் மாறும்!

Comments