பே பே: இந்த உலக மகத்துவம் வாய்ந்த விளையாட்டை யார் கண்டு பிடிச்சதுன்னு தெரியல... ஆனா ரொம்ப பரபரப்பான விளையாட்டு. ஆட்டக்காரர்களை இரண்டு அணிகளாக பிரித்து பந்தை வைத்து எதிரணி ஆட்களை அடிக்க வேண்டும். அடி சில சமயம் பலமாக கூட விழும்.. எந்த அணி ஆளிடம் பந்து இருக்கிறதோ அவரை விட்டு அனைவரும் விலகி ஓடுவர்.
கல்லா மண்ணா? இரண்டு அணிகள் தங்கள் ராஜ்ஜியத்தை தேர்ந்தெடுக்க வேண்டும். ஒரு அணியின் பகுதி கல்லும் கல் சார்ந்த இடமும்... தார் ரோடு கல் சார்ந்த இடமாக கருதப்படும். அடுத்த அணி மண் மற்றும் மண் சார்ந்த இடத்தை எடுத்துக் கொள்வர். ஒரு அணி அடுத்தவர் இடத்தில் போய் நின்று "உன் மண்ணுல நிக்கிறேனே வெட்கம் இல்லையா?", " உன் கல்லுல நிக்கிறனே வெட்கம் இல்லையா?" என சீண்டுவார்கள். அப்போது எதிர் அணி வீரர் வந்து தன் எல்லைக்குள் நிற்பவரை தொட்டு விட்டால் ஒரு பாயிண்ட். இப்படி மாறி மாறி ஒருவரை ஒருவர் சீண்டி விளையாட்டு தொடரும்.
தேங்கா தென்னை மரம் இது மிகவும் பொடி பசங்களுக்கான விளையாட்டு. அவர்களின் உன்னித்து கேட்கும் சக்தியை சோதிக்கும் விளையாட்டு. ஒரு 5 சிறுவர்கள் இருந்தால் அவர்களுக்கு ஒரு பெரிய ஆள் இந்த விளையாட்டை நடத்த வேண்டும். அவர் தேங்காய் சொல்லும் போது எல்லோரும் உட்கார வேண்டும். தென்னை மரம் என்று சொன்னால் எல்லோரும் நிற்க வேண்டும். இப்படி "தேங்காய் தென்னை மரம் தேங்காய் தென்னை மரம் தேங்காய்" என்று மாற்றி மாற்றி சொல்லிக் கொண்டு இருக்கும் போது வேண்டும் என்றே "தென்னை மரம் தென்னை மரம்" என்று இரு முறை ஒரே வார்த்தையை சொல்லி சிறுவர்களை தவறாக உட்கார வைப்பார். அப்படி தவறாக உட்கார்ந்த சிறுவன் ஆட்டத்தை விட்டு விலக வேண்டும். கடைசியாக மிஞ்சி இருக்கும் சிறுவன் வெற்றி பெற்றவனாக அறிவிக்கப் படுவான்.
ஓகே. இது போல இன்னும் பல மாஸ்டர் கேம்ஸ் இருக்கு. அவைகளை தொடர்ந்து பதிவு செய்வோம்.
சமீபத்தில் ரசிக்கும் நிகழ்வுகள்..
1. ஆட்டோ மீட்டர் கேட்காமலேயே போடுகிறார்கள். tasmac கடையில கூலிங் பீர் கிடைக்கிற சந்தோசம் கண்ணுல வருது.. யாரும் மீட்டருக்கு மேல கொடுத்து கெடுத்துடாதீங்க... கவர்மெண்ட் கிலோ மீட்டருக்கு ரெண்டு ரூபா ஏத்துனா கூட பரவா இல்ல... ஆனா மீட்டர் காசு கொடுங்க... ஆனா மீட்டர் அமௌண்ட்ல இருந்து 10 ரூபா ரவுண்டு பண்ணிதான் வாங்குறாங்க... இன்னும் 1 ரூபா 2 ரூபா சில்லறை திருப்பி தர அளவுக்கு கொண்டு வரணும்... இன்னொரு ஐடியா சென்னையில ஒரே ப்ராப்லம் ஒரு இடத்தில இருந்து இன்னொரு இடத்திற்கு போக ஆகும் நேரம்தான்.. 5 கிலோ மீட்டர் போக அரை மணி நேரம் ஆகும்... காலை நேரத்தில இன்னும் கூட ஆகலாம்... அதற்காக... மீட்டர் காசுக்கு மேல ஒரு நிமிடத்திற்கு 50 பைசா சேர்த்து கொடுப்பது போல மீட்டரை வடிவமைத்தால் இன்னும் கொஞ்சம் ஆட்டோ டிரைவர்களுக்கு உற்சாகமாக இருக்கும்... எனக்கு இப்படி ஒரே ஐடியா ஐடியா வா வந்து கிட்டே இருக்கே.... இத யார் கிட்ட பொய் சொல்ல....
2. நிறைய ரோடுகளில் பிளாட்பாரங்களை பெரிது ஆக்கி கொண்டு இருக்காங்க... இதனால ரோடு சைஸ் சின்னதா ஆகிற மாதிரி தெரிஞ்சாலும்... இது ரொம்ப நல்ல விஷயம்... மக்கள் கொஞ்சம் நல்லா நடக்கலாம். பாதசாரிகள் வந்து வண்டிகள் மீது மோத மாட்டாங்க... இது வரை சென்னை மாநகராட்சி பாதசாரிகளை மனிதர்களாகவே கருதி ரோட்டை டிசைன் பண்ணினது இல்லை.. இது ஒரு முதல் திருப்பம்... மேலும் இவங்க திடீர்னு பிளாட்பாரங்களில் நடுவே வரும் டெலிபோன் பாக்ஸ், EB ட்ரான்ஸ்பார்மர், திடீர் கடைகள் எல்லாத்தையும் கொஞ்சம் ஒழுங்கு பண்ணினா சரியா வரும்... பிளாட்பாரம் கடைகள் நம்ம ஊருக்கு ரொம்ப அவசியம்... அவங்களாலதான் வால்மார்ட், டெஸ்கோ போன்ற கம்பனிகளுக்கு போட்டி கொடுக்க முடியும்... ஆனா அவைகளை பாதசாரிகளுக்கு இடைஞ்சல் இல்லாம அமைப்பது ரொம்ப அவசியம்.. அவர்களிடம் சிறிய தொகை மாநகராட்சி வசூல் செய்யலாம்... இல்லை அவர்களுக்கு அந்த சுற்றுபுறத்தை சுத்தமாக வைக்கும் பொறுப்பை கொடுக்கலாம்.
சமீபத்தில் ரசித்த பாடல் வரிகள்...
"அடி உன் வீடு தல்லா குளம் என் வீடு தெப்ப குளம்...
நீரோடு நீரு சேரட்டுமே...
அழகர் மலை கோயில் யானை வந்து அல்வாவ தின்பது போல்
என் ஆசை உன்ன திங்கட்டுமே"
Comments