நான் ஏன் ட்ரெயின் டிக்கெட் எடுக்கும் போது தப்பு பண்ணுகிறேன் என்று தெரிய வில்லை. இரண்டாவது முறையாக மாலை 4 30 மணிக்கு பதிலாக காலை ட்ரெயினில் புக் பண்ணி விட்டு கடைசி நிமிடத்தில் டிக்கெட்டை பார்க்கிறேன். காமெடி என்னன்னா டிக்கெட் புக் பண்ணுவது 2 மாதத்திற்கு முன்பு. ரொம்ப முன் ஜாக்கிரதை முத்தன்னவாக இருந்தாலும் பல்பு வாங்குகிறோம் அப்பப்போ... முதலில் ட்ரெயின் டிக்கெட்டில் ரயில்வே டைம் பிரிண்ட் பண்ணுவதை ஸ்டாப் பண்ண சொல்ல வேண்டும். AM மற்றும் PM என்று தெளிவாக பிரிண்ட் பண்ண சொல்லி முகுல் ராய்க்கு சொல்ல வேண்டும்... அவர்தானே ரயில்வே மினிஸ்டர்? இல்ல அவரையும் தூகிட்டான்களா?
இருபது நாள் முன்னால் கர்ணன் படம் புக் பண்ணி சத்யம் தியேட்டரில் பார்க்க நேரிட்டது... என்ன ஒரு படம்... நம்ம செவாலியே பர்பாமான்ஸ் ரொம்ப பிரமாதம்... உடம்பு முழுவதும் நடிக்கிறது.. சில சீன்ல கொடுத்த பேமண்டுக்கு மேல் பர்பாமான்ஸ் கொடுத்து இருக்கார். இது போல் சில பழைய படங்கள் ரிலீஸ் செஞ்சா நாங்க வந்து பாக்க ரெடி... குறிப்பா கமல் படங்கள் திரும்ப பார்க்க ஆசை. தேவர் மகன், விருமாண்டி, நாயகன், சிங்கார வேலன், மைகேல் மதன காமராஜன் ... இந்த லிஸ்ட் ரொம்ப பெருசு...
கடந்த நாலு நாளா சேலத்தில ஜாகை... வந்த முதல் ரெண்டு நாள் கிள்ய்மேட் குளு குளு... கடந்த இரண்டு நாள் வெயில் பின்னி எடுக்கிறது... சேலத்தில தாஜ்மஹால் மாதிரி செட் போட்டு எக்ஸ்யபிசன் எல்லாம் நடத்துறாங்க... நுழைவு கட்டணம் முப்பது ரூபா... கொஞ்ச ஜாஸ்தி... ஆனா மக்கள் ஆர்வமா வரத்தான் செய்றாங்க... நிறைய கடைக்கான இடங்கள் உள்ளே காலியா இருக்கு... டெல்லி அப்பளமும் மிளகாய் பஜ்ஜியும் சீன ஜயன்ட் வீல் வகயாரக்களும் இது எக்ஸ்யபிசந்தான் என்று நிரூபிக்க ட்ரை பண்ணுகின்றன...
பொன்னுசாமி கவுண்டர் கல்யாண மண்டபத்தில் ஒரு எக்ஸ்யபிசன் போட்டு இருக்கிறார்கள்.. SKS ஹாஸ்பிடல் பக்கத்தில்.. அதுவும் ஒரு அரை குறை அரேஞ்ச்மென்ட்.. ஒரு பக்கம் மலர் கண்காட்சி... ஒரு பக்கம் சில ஸ்டால்கள்.. சோலார் ups , BOSCH கார்டன் எக்யூப்மேன்ட்கள், திருநெல்வேலி இருட்டு கடை அல்வா, போடோஷாப் தமிழ் CD வகையறாக்கள், காலில் வெடிப்பு நீக்கும் கல், நீலகிரி தைலம் போன்ற பொருட்கள் விற்பனைக்கு இருக்கின்றன.. ஒரு லேன்ட் ப்ரமோட்டர்ஸ் கூட ஸ்டால் போட்டு இருக்கிறார்கள். 1200 சதுர அடி 89000 ரூபாய் மட்டுமே.. இங்கயும் டெல்லி அப்பளம் அண்ட் மிளகாய் பஜ்ஜி ப்ரெசென்ட். நாட் மச் impressive ...
ரசிகாஸ் என்ற ஹோட்டலில் சாப்பிட நேர்ந்தது.. சுமார் ரகம்....
இன்று திருச்செங்கோடு சென்று அர்த்தநாரீஸ்வரரை தரிசிக்க முடிந்தது... நல்ல சீரான மலைப்பாதையில் கோயிலுக்கு போக வேண்டும்... கார்கள் சுலபமாக போக முடிகிறது... பஸ் சர்வீசும் இருக்கிறது...சுவாமிக்கு கனமான எலுமிச்சை மாலைகள் போட முடியாது என்று போர்டு போட்டு இருக்கிறார்கள்.. சுவாமி சிலை மிக வீக்... யாரோ சுரண்டி எடுத்தது போல் இருக்கிறது... நவ பாசானமோ என்னமோ... மனிதன் சான்ஸ் கிடைத்தால் கடவுளையும் சுரண்டி விடுவான்... ஆனால் அந்த அம்மையப்பன் எல்லோரையும் காத்து கொண்டுதான் இருக்கிறான்...
ஏற்காடோ, ஒகேனக்களோ போய் இருக்கலாம்... ஆனால் மூட் இல்லை...
ஓகே ஓகே பார்த்தாகி விட்டது.. படம் ஒரு என்டர்டைனிங் ஹிட்..
கடந்த மாதத்தில் கேம்பஸ் இன்டர்வியுக்காக சில காலேஜுகளுக்கு போக முடிந்தது... சும்மா சொல்ல கூடாது... இன்றைய தேதிக்கு கல்வி பிசினஸ்தான் ரொம்ப லாப கரமானது... இந்த இண்டஸ்ட்ரி இன்ஜினியரிங் மற்றும் டிகிரி சர்டிபிகேட்களை பிரிண்ட் பண்ணி தள்ளிக் கொண்டு இருக்கின்றன... மாணவர்களின் சிந்திக்கும் திறமைகள் செத்து கொண்டு இருக்கின்றன. எங்கே போய் முடியும் தெரிய வில்லை...நிறைய புது பிசினஸ்கள் கல்வி துறையை மையமாய் வைத்து இயங்கி கொண்டு இருக்கின்றன... அது உள்ளே நுழைந்து பார்த்தால்தான் தெரியும்...
ஈரோடில் ஜூனியர் குப்பண்ணா ஹோட்டலில் பரோட்டா பிரமாதம்.. கொங்கு பரோட்டஸ் ஹோட்டலிலும் பரோட்டா பிரமாதம்... ஹோட்டல் லே ஜர்டினில் சுவர் எங்கும் ஜோக் எழுதி வைத்து இருக்கிறார்கள். படித்து ரசித்ததில் சில...
பையன்: அம்மா எதிர் வீட்டு ஆன்டி பேர் என்னம்மா?
அம்மா: மஞ்சுடா எதுக்கே கேட்கிற?
பையன்: பின்ன ஏம்மா அப்பா அவங்களை டார்லிங் டார்லிங்க்னு கூப்பிடறாரு?
அம்மா: செத்தாண்டா உங்கப்பன்.....
பையன்: அப்பா ரேங்க் கார்டில் சைன் போடுங்க...
அப்பா: ஏன்டா இவ்வளவு கம்மியா மார்க் எடுத்து இருக்க? என்ன இனிமே அப்பனு கூபிடாத...
பையன்: சரிடா மாப்ள சீன் போடாம சைன் போடு....
சும்மா கலாய்... நோ சீரியஸ்....
பின்ன கோழி சூப் ரம் , நண்டு காக்டெயில் எல்லாம் மெனுவாக வைத்து இருக்கிறார்கள்...
என்னத்த சொல்ல...
Comments