Skip to main content

இதுவும் கடந்து போகும் - பாகம் 2

இது மிகவும் கஷ்ட காலம், இந்திய மக்களுக்கு... அதிலும் குறிப்பாக தமிழக மக்களுக்கு... கடந்த வார விலை உயர்வு அறிவிப்பு பல தர மக்களுக்கும் அதிர்ச்சி தரக்கூடிய விஷயமாகவே உள்ளது... பால், மின்சாரம் மற்றும் போக்குவரத்து விலைகள் உயர்த்தப் பட்டுள்ளன.. இவை அனைத்தும் ஒட்டு மொத்தத்தில் மற்ற அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளை விண்ணுயர விலைகளுக்கு தள்ளப் போகிறது... ஆங்கிலத்தில் இதனை Ripple Effect என்று குறிப்பிடுவார்கள். ஒரு குளத்தில் ஒரு கல்லை எறிந்தால் எப்படி அது ஒரு வளையத்தை ஏற்படுத்தி பின்பு அடுத்தடுத்த பெரிய வட்டங்களை ஏற்படுத்துவதை போல, இந்த விலை உயர்வு மற்ற தேவைகளின் விலை உயர்வுக்கு வழி வகுக்கும். எனவே விலைவாசி இதையும் கடந்து போகும்...

இந்த விஷயம் அரசியல், பொருளாதாரம் மற்றும் மக்களின் அன்றாட வாழ்க்கை சம்பந்தமான விஷயம்....

முதலில் அரசியல் : இந்த விலை உயர்வு ஒரு கசப்பு மருந்து என்று ஒரு நாள் இதழ் குறிப்பிட்டு எழுதி உள்ளது. விலை உயர்வு எல்லோருக்கும் கசப்பு மருந்துதான்... ஆனால் தொண்டையை பிடிக்கும் அளவுக்கு கசப்பு நல்லதல்ல...  எல்லா பொருட்களுமே விலை உயர்வது தவிர்க்க முடியாதது, ஆனால் எவ்வளவு சதவிகிதம் உயர்ந்துள்ளது என்பது வேதனைக்கு உரியது... மக்கள் யாரும் இலவச பொருட்கள் வேண்டும் என்று கேட்க வில்லை... இலவசங்களைக் கொடுத்து அரசின் கருவூலங்களை காலி செய்து விட்டு, மக்களை அத்தியாவசிய தேவைகளில் கை வைப்பது நியாயமற்ற செயல்.. இலவச திட்டங்களை அறிவிக்கும் முன்பு அரசு துறைகள் நஷ்டத்தில் இயங்குவது தெரிய வில்லையா?? உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பு இந்த விஷயம் அரசுக்கு தெரியாதா?? இவ்வளவு விலை உயர்த்திய பிறகு இந்த துறைகள் லாபம் ஈட்டும் என்பது நிச்சயமா??  கடந்த 10  ஆண்டுகளில் விலை உயர்த்த வில்லை எனினும் இந்த விலை உயர்வு மிகவும் அதிகம்.. இன்னும் 5 ஆண்டுகளுக்காவது விலை உயர்த்த படாது என்று உறுதி கூற முடியுமா??  இந்த அரசு துறைகளின் மேலாண்மை ஒழுங்காக நடக்கிறதா ?? அதில் உள்ள குறைபாடுகளை நீக்க ஏதாவது நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளதா??  கூடங்குளம் அணு உலைகள் செயல் பட இந்த தமிழக அரசு ஏதாவது நடவடிக்கை எடுக்கிறதா?? 

பொருளாதாரம் : எந்த நாட்டில் போக்குவரத்தும் மின்சாரமும்  தொலைத்தொடர்பும் தங்கு தடையின்றி குறைந்த விலையில் கிடைக்கிறதோ அந்த நாடு எளிதில் செழிப்படையும். இப்பொழுது நாம் இந்த மூன்று துறைகளிலும் பிரச்சனைகளை சந்தித்து வருகிறோம். முதல் இரண்டும் மாநில அரசாலும், மூன்றாவது மத்திய அரசாலும் நிர்வகிக்கப் படுகிறது.. இவற்றில் பொதுத்துறை மற்றும் தனியார் துறை கம்பனிகள் இருந்தாலும், தமிழகத்தில் மின்சாரம் அரசுத்துறையால் மட்டுமே விநியோகிக்கப் படுகிறது. மற்ற சில மாநிலங்களில் தனியாரும் இந்த சேவையில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் நிர்வாகமும் சேவையும் அரசாங்க துறைகளை விட சிறப்பாகவே உள்ளனர். ஆனால் விலை சிறிது அதிகம். சில சேவைகளில் அரசும் தனியாரும் தனி தனியாக சேவைகளை வழங்கும் பொழுது ஆரோக்கியமான போட்டி ஏற்பட்டு மக்கள் சிறந்த சேவைகளை பெறுவார்கள். தமிழகத்தில் பேருந்துகள் மற்ற மாநிலங்களை விட சிறப்பாகவே உள்ளன. ஆனால் இன்னும் சிறப்பாக செயல்படலாம். மின்சாரத்துறையில் மின்சாரம் முறையாக சேகரிக்கப் படாமலும், தகுந்த மின் கம்பிகளால் கடத்தப் படாமலும் மின்சார திருட்டாலும் மின் துறையில் உள்ள ஊழல்களாலும் மிகுந்த நஷ்டத்தில் செயல் பட்டு வருகிறது... இதனை சரி செய்தாலே அடுத்த 10 ஆண்டுகளுக்கு விலை உயர்த்த வேண்டாம்...

மக்கள் வாழ்க்கை முறை : மக்கள் எப்படி இந்த விலை உயர்வுகளை எதிர் கொள்ள வேண்டும் ?? நான் முன்பே ஒரு பதிவில் எழுதியதை இங்கு மறுபடியும் குறிப்பிட விரும்புகிறேன்... 


1  காலையில் உங்கள் பற்பசையை கொஞ்சமாக உபயோகப் படுத்துங்கள். அது தீர்ந்து போனாலும் நன்றாக பிதுக்கி கடைசி துளி வரை உபயோகிக்க கற்று கொள்ளுங்கள்.. முடிந்தால் ஆலங்குச்சியையோ வேப்பங்குச்சியையோ உபயோகிக்கலாம்...

2 காபி டீ குடிப்பதை உடனே நிறுத்துங்கள். சுக்கு காபி பால் இல்லாமல் குடிக்கலாம்.

3  உடல் பயிற்சி சாலையில் பணம் கொடுத்து வீணாக செலவழிக்காமல் வீட்டிலேயே விட்டத்தை பிடித்து தொங்கலாம்.

4 உணவை வீணாக்காமல் முடிந்த வரையில் வீட்டிலேயே சாப்பிடலாம். 

5 பைக்கிலோ / காரிலோ வேலைக்கு செல்பவராக இருந்தால் இரண்டு / நான்கு பேராக சேர்ந்து செல்லுங்கள். சைக்கிளாக இருந்தால் இன்னொருவரை ஏற்றி கொண்டு அவரை பாதி தூரம் மிதிக்க சொல்லலாம்...

6 உடைகளை அதிகமாக வாங்காமல் பழைய துணிகளை முடிந்த வரை பயன் படுத்தலாம். ஒரு ஜீன்ஸ் வாங்கி துவைக்காமல் பல நாள் போடுவது உசிதம்...

7  சினிமாவுக்கு பணம் செலவழிக்க வேண்டாம்... கேபிள் டிவியில் அவார்ட் சினிமா போட்டால் கூட பார்க்கலாம். எப்படியும் ரிலீஸ் ஆகிற மொக்கை படங்கள் வெகு விரைவில் உங்கள் சின்ன திரைக்கு வந்து விடும்...

8 தேவை இல்லாமல் போன் பேச வேண்டாம்... போன் பேசி நம்முடைய பணத்தையும் மனதையும் நாமே வீணடிக்க வேண்டாம்...

இந்த பதிவு மிக சீரியசாக எழுத தொடங்கி மிக காமெடியாக முடிக்கப் பட்டுள்ளது... நாம் இந்த விலைவாசி உயர்வை சீரியசாக எடுத்து கொண்டால் வேதனைதான் மிஞ்சும்... எனவே நம்முடைய நகைச்சுவை உணர்வை வளர்த்துக் கொண்டு இதையும் கடந்து போகக் கூடிய விலை உயர்வுகளையும் சமாளிக்கும் வழிகளை கற்றுக் கொள்ள விட்டால் நாம் கஷ்டப் படுவது நிச்சயம்....

Oru situation song below...

http://www.youtube.com/watch?v=YR12Z8f1Dh8&feature=share






Comments

Popular posts from this blog

My Prayer

"Vaan Muhil Valaathu Peiga Mali Valam Surakka Mannan Kon Murai Arasu Seiga Kuraivilaathu Uyirgal Vaazgha, Naan Marai Arangal Onga Natravam Velvi Malga Menmai Kol Saiva Needhi Vilanguga Ulagam Ellam" "வான் முகில் வளாது பெய்க மலி வளம் சுரக்க மன்னன் கோன் முறை அரசு செய்க குறைவிலாது உயிர்கள் வாழ்க, நான் மறை அறங்கள் ஓங்க நற்றவம் வேள்வி மல்க மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம் " Translation "Good enough rain for the world Quality soil Resource for cultivation King who rules as per justice and good guidelines Problem free life for all lives Large implementations of 4 vedas in society More existence of Good Prayers and Yaagas Upliftment of saivait rules (Guidelines of People who worship Lord Shiva) in all over the world" This is the prayer I used to recite in my 30 seconds of prayer time every day, eventhough I am not very serious about he second paragraph. I used to hear it in most of the prayers in temples and prayer mee...

ஆடி மாத அடாவடிகள்

மன்மத வருடத்தில் நாளை கடைசி ஆடி வெள்ளி.  ஒரு பக்கம் எல்லா கடைகளும் ஆடி தள்ளுபடின்னு விலைய ஏத்தி அத பெரிசா 50%, 70% கழிவுன்னு சொல்லி விளம்பரம் கொடுக்க, இன்னொரு பக்கம் இந்த பக்த கேடிகள், சாரி பக்த கொடிகள் தெருவுக்கு தெரு பண்ணும் அட்டகாசங்கள் தாங்க முடியல. ஆடி மாசம் வெள்ளி கிழமைல வண்டி எடுக்கறதுக்கு பயமா இருக்கு. நல்லா  போட்ட ரோட்ட குழி தோண்டி, பந்தல் போட்டு, நடு வீதியில ட்ராபிக்க மறிச்சு, கூழ் ஊத்தி, புஷ்பவனம் குப்பு சாமிய கூட்டி வந்து கச்சேரி நடத்தி, பெரிய பெரிய சாமி உருவ சீரியல் செட் போட்டு, ஒரு கிலோ மீட்டருக்கு ட்யுப் லைட் போட்டு ஒரு வழி பண்ணி, எல்லா அம்மன் கோயில் இருக்கும் ஏரியாவையும் ஒன் வேயா மாத்தி, லௌட் ஸ்பீக்கற அலற விட்டு  மக்களை நாத்திகர்களாக மாற்றி கொண்டு இருக்குறாங்க. இவங்க பண்ற செலவுல இருக்குற கோயில விட பெரிய கோயிலே கட்டலாம். கோயிலே பத்துக்கு பத்து அளவுதான். அதுக்கு பந்தல் அது மாதிரி பத்து மடங்கு.  இது இப்படியே போனா விவேக் சொல்ற மாதிரி பத்து பெரியார் உருவானாலும் ஆச்சரிய பட முடியாது. இவங்க மக்கள் கிட்ட வசூல் பண்ற காச வச்...

Borrowed Wisdom

Currently I am seeing the following in gtalk status messages of my friends near my inbox   1) Arrogance is never style  2) Party hard....work harder.....shop hardest... 3) ThE InTeRpReTaTiOn Of dReAmS iS tHe rOyAl rOaD To a kNoWlEdGe Of thE UnCoNcIoUs acTiViTiEs Of ThE MiNd 4) Better late than never, but never late is better 5) Dont Make them priority for those whom you are just an option 6) "There is no remedy for Love but to Love more"-Henry David Thoreau 7) Life is Beautiful...Enjoy the Fullest 8) lunch   All are from different timezone, in different moods, with different perception to life. Check the list probably your message also may be in it.