ஒரு இந்திய வாக்காளனாக எனக்கும் நிறைய எதிர் பார்ப்புகள் இந்த தேர்தலை சுற்றி உள்ளன... 2009லும் இருந்தன.. அப்பொழுது எழுதிய பதிவு இங்கே
அதே எதிர்பார்ப்புகள் இன்றும் இருக்கின்றன... சேது சமுத்திர திட்டத்தை தவிர... ஏன் எனில் சேது சமுத்திர திட்டத்தை செயல் படுத்துவதில் உள்ள சிரமங்களை பற்றி தெளிவான கருத்து என்னிடம் இல்லை. கண்டிப்பாக அது ராமர் மீது உள்ள பக்தியால் இல்லை.
இந்த முறை அமையக் கூடிய ஆட்சி இவை எல்லாம் செய்யுமா என தெரிய வில்லை.. யார் ஆட்சிக்கு வருவார்கள் என்றும் தெரிய வில்லை... இந்த முறை நடக்கும் தேர்தல் கட்சிகளுக்கு மத்தியில் என்பதை விட தனி மனிதர்களுக்கு இடையில்தான் நடக்கிறது...
என் உள் மனதில் மோடி,ராகுல்,ஜெயலலிதா அல்லாத ஒரு நபர் பிரதமராக வருவாரோ என்று தோன்றுகிறது... எப்படி 2004ல் மன்மோகன் வந்தாரோ அதைப் போல ஒரு எதிர்பாராத நபர் வந்தால் என்ன ஆகும் என்ற சந்தேகங்கள் வருகின்றன..
சமீப காலமாக எனக்கு ஒரு யோசனை. IPL போல தேர்ந்தெடுக்கப் படும் எல்லா MP களில் இருந்து கட்சி பாகுபாடு இல்லாமல் அமைச்சரவை தேர்ந்தெடுக்கப் பட்டால் எப்படி இருக்கும் என்று...
ஓகே யார் வர வேண்டும்?என்னுடைய தனிப் பட்ட விருப்பம் நரேந்திர மோடி பிரதமராக வேண்டும்...
அதற்கு நிறைய காரணங்களை முன் வைக்க முடியும். அதே காரணங்களை எல்லோராலும் எதிர்த்து வாதிடவும் முடியும்... அதில் தவறு ஏதும் இல்லை...
முதலில் மற்றவர்கள் ஏன் வர வேண்டாம் என்று நினைக்கிறேன்...
1. ராகுல் காந்திக்கு நாட்டை வழி நடத்தும் அனுபவம் இருப்பதாக நினைக்க வில்லை... இப்பொழுதுதான் அவர் கட்சிக்குள் பேசவே ஆரம்பித்து இருக்கிறார்.. அவர் இன்னும் ஒரு 5 ஆண்டுகள் கட்சியை ஒழுங்கு படுத்துவதிலே செலவிடலாம்... மற்ற ஒரு விஷயம் RaGa வை விட நிறைய அனுபவம் வாய்ந்தவர்கள் காங்கிரஸ் கட்சியில் இருக்கிறார்கள்... காங்கிரசும் இந்தியாவும் நேரு குடும்ப சொத்து அல்ல...
2. ஜெயலலிதா பிரதமரானால் தமிழ் நாட்டை யார் பார்ப்பது...? அப்படியே அவர் வந்தாலும் அவர் பல கட்சிகளின் ஆதரவில் ஆட்சி நடத்த நேரிடும்... அனைவரையும் அரவணைத்து அவரால் 5 ஆண்டுகளுக்கு ஆட்சி நடத்துவது அவரது பாணியில் முடியாத காரியம்..
3. மூன்றாவது அணி மூலமாக யார் வந்தாலும் அவர்களால் 5 ஆண்டை பூர்த்தி செய்ய முடியாது என்பது எனது அதீத நம்பிக்கை...
4. அர்விந்த் கேஜ்ரிவால் நடை முறைக்கு ஒத்து வராத மனிதர்... AAP ஆட்சிக்கு வருவது இன்னும் 2 நாடாளு மன்ற தேர்தலில் நினைத்து பார்க்க முடியாது... 2 நாடாளு மன்ற தேர்தலுக்குப் பின் AAP என்ற ஒரு கட்சி இருந்தால் அதுவே ஒரு சாதனை....
இப்போது ஏன் மோடி வர வேண்டும்.?
1. அவருடைய 12 வருட அனுபவம்.. குறைந்தது அனைத்து மாநிலங்களையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தது... அதில் சில குறைகள் இருந்தாலும் ஒட்டு மொத்தத்தில் அவருடைய ஆட்சி சிறப்பாகவே இருந்து வருகின்றது...
2. அவருடைய வாதங்கள் சராசரி மனிதனால் ஒத்து கொள்ள முடிகிறது. இட ஒதுக்கீட்டைப் பற்றியாகட்டும், நாட்டின் பாதுகாப்பை பற்றியாகட்டும், வருமான வரி பற்றியாகட்டும் ஒரு தெளிவான சிந்தனை இருக்கிறது...
3. பேச்சிலும் செயலிலும் உள்ள உறுதித்தன்மை. இந்தியாவை உலக அரங்கில் அயல் நாட்டு விவகாரங்களில் தலை நிமிரச் செய்ய உறுதி உள்ள தலைவர் தேவை..
4. தனக்கென்ற அதீத சொத்துக்களை சேர்க்க வண்டும் என்ற தேவை இல்லாதவர். சாதனைகளில், அவற்றின் மூலம் வரும் புகழில் நாட்டம் உடையவர்...
5. நீண்ட தொலை நோக்கு பார்வை கொண்டவர். அவர் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப் பட்ட நாள் கணக்கை கொண்டே இதை அறியலாம்...
இதை எல்லாம் தாண்டி அவரைப் பற்றி பல குறைகளை காண முடியும்... அவை அனைத்தும் மோடியை பிரதமர் ஆக தடுக்கும் காரணங்கள் அல்ல... அவர் வந்தால் எல்லா குறைகளையும் தீர்த்து விடுவார் என்று கூற முடியாது... ஆனால் மிக முக்கியமான சில பிரச்சனைகளையாவது தீர்ப்பார் என்பதில் சந்தேகம் இல்லை...2014ஐ விட 2019 சிறப்பாக இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது...
இவரை விட யாராவது சிறந்த வேட்பாளரை கொண்டு வந்து முன்னால் நிறுத்துங்கள் அப்போது அவரை ஆதரிப்போம்...
அடுத்த தேர்தலில் இந்த பிரதமர் சரியாக வேலை செய்ய வில்லை என்றால் மீண்டும் காங்கிரசை கூட ஆதரிப்போம்... அவர்களும் நல்ல வேட்பாளர்களை நிறுத்த வேண்டும்.
2019லும் நான் என்னுடைய இந்த பதிவை வைத்து பார்த்துக் கொண்டு இருப்பேன்...
இப்பொழுது எனது முக்கிய எதிர்பார்ப்புகள்
1. வருமான வரியை நீக்குவது அல்லது எல்லா சேமிப்புகளுக்கும் வருமான வரியை நீக்குவது.. இது கருப்பு பணத்தையும் குறைக்கும்...
2. தொழில் வளர்ச்சியையும் வேலை வாய்ப்புகளையும் சென்னை, மும்பை, கொல்கத்தா,டெல்லி, குர்கான், புனே, அகமதாபாத் அல்லாத சிறிய நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் எடுத்து செல்வது... மக்கள் தொகையை சமமாக நாடு முழுவதும் இருக்குமாறு திட்டமிடுவது... வாழ்க்கை தரம் பேரு நகரங்களில் குறைந்து வருவது இதற்கு ஒரு காரணம்...தை பற்றி இன்னொரு பதிவு தனியாக எழுத திட்டமிட்டு இருக்கின்றேன்...
பின் குறிப்பு
1. நான் BJP உறுப்பினர் அல்ல.
2. நான் ஹிந்து மத வெறியன் அல்ல.. மற்ற மதத்தவரை விரோதியாக நினைப்பவனும் அல்ல..
3. நான் காங்கிரஸ் செய்த சில நல்ல காரியங்களையும் அறிந்தவன்... (நேரு IIT போன்ற கல்வி நிறுவனங்களை கொண்டு வந்தது, தகவல் உரிமை சட்டம் போன்றவை...)
4. அனைத்து தலைவர்களுமே சில நல்ல காரியங்களும் சில அவ்வளவு நல்ல காரியங்கள் அல்லாதவையும் செய்துள்ளனர் என்பதில் தெளிவாக உள்ளவன்...
5. மொத்தத்தில் நான் ஒரு பகுத்தறிவாளன்.ஆனால் என்னை எந்த திராவிட கட்சிகளோடும் இணைத்துப் பார்க்க தேவை இல்லை...
நினைவில் வரும் பாடல் வரிகள்...
ஊரும் கொண்டாட உலகம் கொண்டாட ஊர்கோலம் போகும் சாமி
நாடும் வீடும் நல்ல வாழ நீதான் நேர் வழி காமி..
சாதி சனம் ஒண்ணாக சேர்ந்தது சாமியத்தான் எல்லோரும் கேட்குது
நீ கேட்ட கேட்டதை கொடுக்கற சாமியை பார்த்து கேளுங்கடா..
Comments