Skip to main content

Posts

தேர்தல் 2019

எல்லோரும் தங்கள் அரசியல் கருத்துக்களை பதிவு செய்து வரும் இந்த நேரத்தில், என்னுடைய கருத்தையும் பதிவு செய்வது என்று தீர்மானித்து வெகு நாட்களுக்குப்  பிறகு இந்த பதிவை எழுதுகிறேன். இதில் மாற்று கருத்து உள்ளவர்கள், தங்கள் கருத்தை மிக நாகரிகமாக முன் வைத்தால், நல்ல விவாதங்களுக்கு நான் தயார்.  சொல்ல வந்ததை முதலில் சொல்லி விடுகிறேன். பின்பு காரணங்களாக நான் கருதுவதை விளக்குகிறேன்.  1. தமிழ்நாடு சட்ட மன்ற தேர்தல், 2019 பாராளுமன்ற தேர்தலோடு சேர்ந்து வர வாய்ப்பு இருப்பதாக யூகிக்கிறேன். 2. அப்படி வந்தால், திமுக ஆட்சியை பிடிக்கும் என்று நினைக்கிறேன் அல்லது விரும்புகிறேன். நான் தி மு க உறுப்பினர் அல்ல. 3. மத்தியில் பாஜக மறுபடியும் ஆட்சியை பிடிக்கும் என்று நினைக்கிறேன் அல்லது விரும்புகிறேன். நான் பா ஜ க உறுப்பினரும் அல்ல. ஆனால் தமிழ் நாட்டில் பா ஜ க ஒரு தொகுதியில் கூட வெல்ல வாய்ப்பு இல்லை. நானே ஓட்டு போட மாட்டேன். 4. மத்தியில் உருவாகும் பா ஜ க ஆட்சியில் ஒரு தமிழக கட்சியும் கூட்டணியில் இருக்க வேண்டும். தி மு க அப்படி இருக்குமா என்றால், அது நடக்கும் என்று தோன்ற வில்லை. ஆனால் அரசியலி
Recent posts

காலங்கள் மாறும்! காட்சிகள் மாறும்!

ஒரு வருடத்திற்கு பிறகு ஒரு பதிவு போட இப்பதான் நேரம் வந்தது. போன வருஷம் ஆடி மாதத்தில் எழுதியது. அடுத்த ஆடி போய் விட்டது. எதை பற்றி எழுதுவது? சினிமா விமர்சனம்? பல பேர் எழுதுகிறார்கள். நம்ம என்ன புதுசா எழுத இருக்கு?  சமீபத்தில் என் ஆபீஸ் பாஸ் அரவிந்த் பொன்னிறைவன் வேலைய ரிசைன் பண்ணி விட்டு திடீர்னு ரெஸ்டாரண்ட் ஆரம்பிச்சுட்டார். கோடம்பாக்கம் சக்ரபாணி தெருவில் மஞ்சள் ரெஸ்டாரண்ட்னு போன மாசம் ஆரம்பிச்ச்சு நல்லா  போய்கிட்டு இருக்கு.. http://manjalspice.in/ கிட்ட தட்ட 15 வருஷம் ஐடி வேலை.. பின்ன ஒரு நாள் பொசுக்குன்னு இப்படி பண்ணிட்டார்..  சும்மா சொல்ல கூடாது.. கிட்ட தட்ட ஒரு வருஷம் கிரௌண்ட் ஒர்க் பண்ணி, இன்டீரியர்ஸ் எல்லாம் பக்காவா  ரெடி  பண்ணி, நல்ல குக், வெய்ட்டர்ஸ் எல்லாம் ஐடி வேலைக்கு இன்டெர்வியூ பண்ற மாதிரி பண்ணி சூப்பரா பண்ணி இருக்கார். வாழ்த்துக்கள் அரவிந்த்! நாங்களும் போய் ஒரு நாள் லஞ்ச் ஒரு பிடி பிடிச்சுட்டு வந்தோம்.. எனக்கு என்ன பிடிச்சதுன்னா வெஜிடேரியன் சாப்பாடும் நல்லா பண்ணி இருக்காங்க.. எப்போதும் நான் வெஜிடேரியன் ரெஸ்டாரண்ட் வெஜிடேரியன கண்டுக்க மாட்டாங்க..

ஆடி மாத அடாவடிகள்

மன்மத வருடத்தில் நாளை கடைசி ஆடி வெள்ளி.  ஒரு பக்கம் எல்லா கடைகளும் ஆடி தள்ளுபடின்னு விலைய ஏத்தி அத பெரிசா 50%, 70% கழிவுன்னு சொல்லி விளம்பரம் கொடுக்க, இன்னொரு பக்கம் இந்த பக்த கேடிகள், சாரி பக்த கொடிகள் தெருவுக்கு தெரு பண்ணும் அட்டகாசங்கள் தாங்க முடியல. ஆடி மாசம் வெள்ளி கிழமைல வண்டி எடுக்கறதுக்கு பயமா இருக்கு. நல்லா  போட்ட ரோட்ட குழி தோண்டி, பந்தல் போட்டு, நடு வீதியில ட்ராபிக்க மறிச்சு, கூழ் ஊத்தி, புஷ்பவனம் குப்பு சாமிய கூட்டி வந்து கச்சேரி நடத்தி, பெரிய பெரிய சாமி உருவ சீரியல் செட் போட்டு, ஒரு கிலோ மீட்டருக்கு ட்யுப் லைட் போட்டு ஒரு வழி பண்ணி, எல்லா அம்மன் கோயில் இருக்கும் ஏரியாவையும் ஒன் வேயா மாத்தி, லௌட் ஸ்பீக்கற அலற விட்டு  மக்களை நாத்திகர்களாக மாற்றி கொண்டு இருக்குறாங்க. இவங்க பண்ற செலவுல இருக்குற கோயில விட பெரிய கோயிலே கட்டலாம். கோயிலே பத்துக்கு பத்து அளவுதான். அதுக்கு பந்தல் அது மாதிரி பத்து மடங்கு.  இது இப்படியே போனா விவேக் சொல்ற மாதிரி பத்து பெரியார் உருவானாலும் ஆச்சரிய பட முடியாது. இவங்க மக்கள் கிட்ட வசூல் பண்ற காச வச்சு ஒன்னும் உருப்படியா பண்றது இல்ல. அனாவ

Infinity + 1 thoughts!

  Some random picks 1. People lack creativity or they just Do what others generally do - I still see people commenting "So Cute" for almost all the baby photos posted by their parents. Everyday I am seeing someone posting "Thank you all for your wishes. You made my day special", or "Chennai here I come", or "home sweet home" & the list goes on. Think different guys. It's getting monotonous to read FB statuses and replies. 2. When girls don't want to upload their pictures in facebook, why they frequently use pictures of Trisha or Genelia or Samantha? Any particular reason? 3. In certain temples and public places, Government charging money for carrying a camera. They also charge anybody carrying a mobile phone with good camera as well. This doesn't sound logical. Almost majority of phones now a days have decent camera. I saw this in Trichy Malaikottai and Vandalur Zoo. Please think. 4. Suddenly I found my car is not making the rever

தேர்தல் 2014

ஒரு இந்திய வாக்காளனாக எனக்கும் நிறைய எதிர் பார்ப்புகள் இந்த தேர்தலை சுற்றி உள்ளன... 2009லும் இருந்தன..  அப்பொழுது எழுதிய பதிவு இங்கே அதே எதிர்பார்ப்புகள் இன்றும் இருக்கின்றன... சேது சமுத்திர திட்டத்தை தவிர... ஏன் எனில் சேது சமுத்திர திட்டத்தை செயல் படுத்துவதில் உள்ள சிரமங்களை பற்றி தெளிவான கருத்து என்னிடம் இல்லை. கண்டிப்பாக அது ராமர் மீது உள்ள பக்தியால் இல்லை. இந்த முறை அமையக் கூடிய ஆட்சி இவை எல்லாம் செய்யுமா என தெரிய வில்லை.. யார் ஆட்சிக்கு வருவார்கள் என்றும் தெரிய வில்லை... இந்த முறை நடக்கும் தேர்தல் கட்சிகளுக்கு மத்தியில் என்பதை விட தனி மனிதர்களுக்கு இடையில்தான் நடக்கிறது... என் உள் மனதில் மோடி,ராகுல்,ஜெயலலிதா அல்லாத ஒரு நபர் பிரதமராக வருவாரோ என்று தோன்றுகிறது... எப்படி 2004ல் மன்மோகன் வந்தாரோ அதைப் போல ஒரு எதிர்பாராத நபர் வந்தால் என்ன ஆகும் என்ற சந்தேகங்கள் வருகின்றன.. சமீப காலமாக எனக்கு ஒரு யோசனை.  IPL போல தேர்ந்தெடுக்கப் படும் எல்லா MP களில் இருந்து கட்சி பாகுபாடு இல்லாமல் அமைச்சரவை தேர்ந்தெடுக்கப் பட்டால் எப்படி இருக்கும் என்று... ஓகே யார் வர வேண்டும்?என்னு

பிள்ளையாய் இருப்பதிலே இல்லை ஒரு துன்பமடா- பாகம் 2

பே பே:  இந்த உலக மகத்துவம் வாய்ந்த விளையாட்டை யார் கண்டு பிடிச்சதுன்னு தெரியல... ஆனா ரொம்ப பரபரப்பான விளையாட்டு. ஆட்டக்காரர்களை இரண்டு அணிகளாக பிரித்து பந்தை வைத்து எதிரணி ஆட்களை அடிக்க வேண்டும். அடி சில சமயம் பலமாக கூட விழும்.. எந்த அணி ஆளிடம் பந்து இருக்கிறதோ அவரை விட்டு அனைவரும்  விலகி ஓடுவர். கல்லா மண்ணா?  இரண்டு அணிகள் தங்கள் ராஜ்ஜியத்தை தேர்ந்தெடுக்க வேண்டும். ஒரு அணியின் பகுதி கல்லும் கல் சார்ந்த இடமும்... தார் ரோடு கல் சார்ந்த இடமாக கருதப்படும்.  அடுத்த அணி மண் மற்றும் மண் சார்ந்த இடத்தை எடுத்துக் கொள்வர். ஒரு அணி அடுத்தவர் இடத்தில் போய் நின்று "உன் மண்ணுல நிக்கிறேனே வெட்கம் இல்லையா?", " உன் கல்லுல நிக்கிறனே வெட்கம் இல்லையா?" என சீண்டுவார்கள். அப்போது எதிர் அணி வீரர் வந்து தன் எல்லைக்குள் நிற்பவரை தொட்டு விட்டால் ஒரு பாயிண்ட். இப்படி மாறி மாறி ஒருவரை ஒருவர் சீண்டி விளையாட்டு தொடரும். தேங்கா தென்னை மரம்  இது மிகவும் பொடி பசங்களுக்கான விளையாட்டு.  அவர்களின் உன்னித்து கேட்கும் சக்தியை சோதிக்கும் விளையாட்டு. ஒரு 5 சிறுவர்கள் இருந்தால் அவர்களுக்கு ஒரு ப

பிள்ளையாய் இருப்பதிலே இல்லை ஒரு துன்பமடா !

எத்தனை பேருக்க்கு நினைவிருக்கும் தெரியவில்லை. சில குழந்தை பருவ விளையாட்டுகள் இப்போது காணாமல் போய் விட்டன. நமக்கே சிலன மறந்து போய் விட்டன. இந்த பதிவு அந்த தொலைந்து போன, தொலைந்து கொண்டு இருக்கின்ற விளையாட்டுகளை பதிவதற்காக. 1. செதுக்கு:  இந்த விளையாட்டில் ஒரு வட்டம் தரையில் வரைந்து அதற்குள் அவரவர் கொண்டு வந்த புளியன் கொட்டைகளை போட வேண்டும். ஆளுக்கு 10 அல்லது 20 என எல்லோரும் சமமாக போட்டு, அதனை தட்டையான கல்லை வைத்து செதுக்கி வட்டத்துக்கு வெளியே எடுக்க வேண்டும். அந்த கொட்டைகள்  செதுக்கி எடுப்பவருக்கு சொந்தம். ஒரு செதுக்கில் ஒரு கொட்டை கூட எடுக்க வில்லையெனில் ஆட்டம் அடுத்தவருக்கு போகும். இப்படி ஒருவர் கொண்டு வந்த புளியன் கொட்டைகளை இழந்து வீடு திரும்புவதும் உண்டு, ஜாக்பாட் அடித்து அடுத்தவர் சேமிப்பை வழித்து எடுத்து கொண்டு போவதும் உண்டு. இதுவே பின்னாளில் சிகரெட் அட்டைகளை கொண்டு விளையாடினர். சிசர்ஸ் அட்டைக்கு 10 பாயிண்ட், கோல்ட் ப்லக் 20 பாயிண்ட். சார்மினார் 100 பாயிண்ட். எப்படி தொண்ணூறுகளுக்கு பிறகு குழந்தைகள் WWF கார்டுகளை சேர்க்க ஆரம்பித்தார்களோ, அதற்கு முன் சிகரெட் அட்டை சேர்ப்பது ஒர